வரலாறு:-
சூரியகாந்தி மத்திய அமெரிக்க நாடுகளைச் சொந்த இடமாகக் கொண்டது. இது குறைந்தது கி.மு 2600 ஆண்டுகள் அளவில் முதன்முதலில் மெக்சிகோவில் பயிரிடப்பட்டது என்பது அதை உறுதிப்படுத்தும் சான்றாகும். இது இரண்டாம் முறையாக மத்திய மிசிசிப்பி பள்ளத்தாக்கில் பயிரிடப்பட்டிருக்கலாம் அல்லது முற்காலத்தில் மெக்சிகோவிலிருந்து சோளம் அறிமுகமாகியபோது இதுவும் அறிமுகமாகியிருக்கலாம். வடக்கு மெக்சிகோவில் மிகவும் முந்திய காலத்தில் முழுதாக பயிரிடப்பட்டதாக அறியப்பட்ட சூரியகாந்தி எடுத்துக்காட்டுகள் டென்னசியில் கி.மு 2300 அளவில் காணப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்து:-
பொட்டாசியம், மெக்னீசியம், ஃபார்மிக் அமிலம், ஸ்டீரியக் அமிலம்.
வைட்டமின்:-
வைட்டமின்கள் A,D,மற்றும் E
நன்மைகள்:-
1. கொழுப்புச் சத்து குறையும் சீதபேதியை குணப்படுத்தும்.
2. காய்ச்சல், வயிற்றுவலி, வலியுடன் சிறுநீர்கழிதல், கண்வலியுடன் வீங்குதல், மண்ணீரல், கோளாறுகள், புண்களை ஆற்றும்.
3. விதைகள் பாக்டீரியா கொல்லிகள். சிறுநீர் கழிவை அதிகரிக்கும். கபம் வெளியேற்றும், காய்ச்சல் தணிக்கும், இருமல் ஜலதோஷத்திற்கு பயன்தரும்.
4. காற்று குழாய்,பேச்சுக்குழாய், மற்றும் நுரையீரல் பாதிப்புகளை குணப்படுத்தும்.
5. சூரியகாந்தி எண்ணெய் அதிக கொழுப்புச்சத்தை குறைக்கும்.
6. ஒரு கோப்பை சூரிய காந்தி விதையில் ஆயிரத்து 300 மில்லி கிராம் பொட்டாசியம் காணப்படுவதாக உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை உபயோகிப்பதன் மூலம் பக்கவாத நோய் தாக்குதலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதும் தடுக்கப்படுகிறது.
7. கால் கோப்பை சூரிய காந்தி விதையில் 32 சதவிகிதம் மெக்னீசியம் காணப்படுகிறது. இது நரம்பு செல்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தசை தொடர்பான நோய்கள் வராமல் தடுப்பதில் மெக்னீசியத்தின் பங்கு முக்கியமானது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
சப்போனின்கள்-ஹீலியான்தோஸைடுகள், A,B&C லினோலிக், மிரிஸ்டிக், பாலிமிட்டிக், ஒலியாக், ஸ்டீரியக் அமிலம், வைட்டமின்கள் A,D,மற்றும் E காணப்படுகின்றன. விதைகளில் அசிட்டோன், ஃபார்மிக் அமிலம் மெத்தில் ஆல்கஹால் காணப்படுகின்றன.
ரத்த அழுத்தம் கட்டுப்படும்:
இதயம் தொடர்பான நோய்கள், இரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் சூரிய காந்தி விதைகள் கட்டுப்படுத்துகின்றன. ஆஸ்துமா தொடர்பான நோய்களையும் குணப்படுத்துகின்றன.
மெனோபாஸ் டென்சனை குறைக்கும்:
இதில் உள்ள வைட்டமின் ஈ உயிர்சத்தும், ஆன்டி ஆக்சிடண்டும் உடல் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்தினை குறைக்க உதவுகிறது. நீரிழிவு மற்றும் புற்றுநோய்களை கட்டுப்படுத்துகிறது. பெண்களின் மெனோபஸ் கால டென்சனை குறைக்க உதவுகிறது.
Tags:
OIL