Mustard Oil - கடுகு எண்ணெய் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்


வரலாறு:-

கடுகு என்பது கடுகுத் தாவரங்களில் இருந்து பெறப்படும் ஒரு சிறிய, உருளை வடிவ விதையாகும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்துள்ளது. கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும்.


ஊட்டச்சத்து:-

கால்சியம் - எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் - சிறந்த நோய் எதிர்பொருளாகவும், தாமிரம் - ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு - செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.


வைட்டமின்:-

வைட்டமின் பி , கே,சி.


நன்மைகள்:-

1. கை கால் மூட்டு வலி வாயு பிடிப்பு ரத்தக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய்சிறந்த தீர்வு தரும்.

2. கடுகு எண்ணெய் பெண்கள் தங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க உதவும், லேசாக சூடு படுத்தியபிறகு கடுகு எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் மறைந்துவிடும்.

3. கடுகு எண்ணெய்யுடன் நன்கு அரைத்த மஞ்சள் கலந்து முகத்தில் பூசிவந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.

4. கடுகு எண்ணெயால் மசாஜ் செய்வது குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இதில் வெப்பத்தை உண்டாக்கும் தன்மை உள்ளதால், குளிர் காலத்தில் மட்டுமே கடுகு எண்ணெய்யை உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கோடைக்காலத்தில் இதை பயன்படுத்தும் போது சருமத்தில் எரிச்சல் உண்டாகும்.

5. கடுகை அரைத்து முட்டிவலி மற்றும் ரத்தக்கட்டியின் மீதும், தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போட்டால் வலி நீங்கும்.

6. கடுகு எண்ணெயை குழந்தைகள் முதல் பெரியவர் வரை, உடலில் பூசி ஊரவைத்து குளிப்பது சருமத்திற்கு வனப்பளிக்கின்றது, மேலும் தலை முடி கொட்டுவதையும் தடுக்கிறது.

7. கடுகுக் கீரை ஜீரணத்தை பாதிக்கும். அதனால் காலநிலைக்கு ஏற்றவாறு உபயோகிக்க வேண்டும்.

8. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

மட்டன் கறி:
கடுகு எண்ணெய்யில் குறைவான கொழுப்பு உள்ளதால், அந்த எண்ணெய்யை பயன்படுத்தி ருசியான மட்டன் கறி செய்யலாம். மட்டன் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை தரும் என்பதால், அதனை கடுகு எண்ணெய்யில் சமைக்கும் போது இன்னும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் அலுப்பு, உடல் வலி போன்றவற்றி நல்ல தீர்வு தரும்.



 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post