Lemon - எலுமிச்சை பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்


வரலாறு:-

எலுமிச்சை (எல்) ஓசுபேக் என்ற தாவரவியற் பெயர் கொண்ட நிலம்வாழ் தாவரமாகும். ஆசியாவை தாயகமாகக் கொண்ட இத்தாவரம் பூக்கும் தாவரம் என்ற துணைப்பிரிவில் ருட்டேசி குடும்பத்தின் உறுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல மண்டலப் பகுதிகளில் இது வளர்கின்றது. குறுஞ்செடி வகைத் தாவரமாக எலுமிச்சை அறியப்படுகிறது.


ஊட்டச்சத்து:-

கலோரி - 24
புரத சத்து - 0.92 கிராம்
நார்ச்சத்து - 2.4 கிராம்
இரும்பு சத்து - 0.5 மில்லி கிராம்
கால்சியம் - 11 மில்லி கிராம்
சோடியம் - 2 மில்லி கிராம்
பொட்டாசியம் - 138 மில்லி கிராம்
சர்க்கரை - 2.5 கிராம்


வைட்டமின்:-

வைட்டமின் C.


நன்மைகள்:-

1. கோடை காலங்களில் ஏற்படும் தாகத்தை தணிக்க எலுமிச்சை பழம் பயன்படுகிறது.

2. ஒரு கப் சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, பிழிந்து சாறக்கி கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும்.

3. எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.

4. எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.

5. எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.

6. எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.

7. உடல் நமைச்சலைப் போக்கும்

8. மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.


பக்க விளைவுகள்:-

1. நாம் எலுமிச்சை அதிகமாக உட்கொள்வதால் நமது பற்களின் எனாமல் அரிக்கப்படுகிறது , அதனால் பல் கூச்சம் ஏற்படும்.


 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post