Apple - ஆப்பிள் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

 


வரலாறு:-

ஆப்பிள் (இலங்கை வழக்கு: அப்பிள்) அல்லது குமளி என்பது வருடத்திற்கொரு முறை இலையுதிரும் ரோசாசிடே குடும்பத் தாவரமாகும். சுவைமிக்க இதன் பழம் குமளிப்பழம், ஆப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம், ஆப்பிள் அல்லது அப்பிள் என அழைக்கப்படுகின்றது. பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவும் காணப்படும். ஆப்பிள் பழத்தின் தோல் மெலிதாகவும் பழச்சதை உறுதியாகவும் இருக்கும். சதையின் உள்ளே சில சிறு விதைகள் இருக்கும். மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp.


ஊட்டச்சத்து:-

கலோரி - 52
புரத சத்து - 0.47 கிராம்
நார்ச்சத்து - 4.4 கிராம்
இரும்பு சத்து - 0.48 மில்லி கிராம்
கால்சியம் - 11 மில்லி கிராம்
சோடியம் - 1 மில்லி கிராம்
பொட்டாசியம் - 107 மில்லி கிராம்
சர்க்கரை - 10 கிராம்


வைட்டமின்:-

வைட்டமின் C, B, A.


நன்மைகள்:-

1. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரைய அணுக வேண்டி அவசியமில்லை என சொல்கிறது ஆங்கில யபழமொழி, ஆனால் ஆப்பிள் ஒரு அழகுக்கலை நிபுணரையே உள்ளே அடக்கியிருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் அழகுமொழி.

2. ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை நீக்குகிறது. குடல் பாதையில் உள்ள நுண்கிருமிகளை கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட்டால் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் உள்ள நுண்கிருமிகள் நீங்குகின்றன.

3. வயதானவர்களுக்கு ஆப்பிளின் மேற்புறத் தோலானது செரிக்கக் கடினமாக இருக்கும். அதனால் அவர்கள் அதன் மேற்புறத் தோலை நீக்கி உட்கொள்வது நல்லது.

4. நீர்ச்சத்து அதிகம் கொண்ட ஆப்பிள் பழத்தை கோடைக் காலத்தில் அதிகம் உட்கொள்ளலாம். இதில் மாவுச்சத்தும் நிறைந்திருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் சரிவிகித சம உணவுக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனையின் படி ஒன்று அல்லது இரண்டு கீற்றுகளாக ஆப்பிளை எடுத்துக் கொள்ளலாம்.


பக்க விளைவுகள்:-

1. அதிகம் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கும், பல் எனாமல் பாதிக்கும்.


Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post