வரலாறு:-
அன்னாசி பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. அன்னாசி என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. இது பிரமிலசே இனத்தைச்சேர்ந்த தாவரம் ஆகும்.
ஊட்டச்சத்து:-
கலோரி - 82
புரத சத்து - 0.89 கிராம்
நார்ச்சத்து - 2.3 கிராம்
இரும்பு சத்து - 0.48 மில்லி கிராம்
கால்சியம் - 21 மில்லி கிராம்
சோடியம் - 1 மில்லி கிராம்
பொட்டாசியம் - 103 மில்லி கிராம்
சர்க்கரை - 10 கிராம்
வைட்டமின்:-
வைட்டமின் C, B6, B1.
நன்மைகள்:-
1. அன்னாசி பழத்தில் வைட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது, பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்த மில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்.
2. நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெய்யிலில் தூசிப் படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதனால் பித்தம் சம்பந்த மான அனைத்து கோளாறுகளும் நீங்கும்.
3. அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய் குணமாகும்.
பக்க விளைவுகள்:-
1. பழுக்காத அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வாய் வீக்கம், கடுமையான வாந்தி ஏற்படுத்தும்.
Tags:
FRUITS