Fig - அத்தி பழம் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்


வரலாறு:-

அத்தி Moraceae(மோரேசி) தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் Ficus glomerata மற்றும் Ficus auriculate ஆகும். இது களிமண் நிலம் மற்றும் ஆற்றோரப் பகுதிகளிலும் நன்கு வளரும். அத்தி மரத்தில் வினோதமான முறையில் பூவும் விதைகளும் சேர்ந்து பழம் போன்றதொரு தோற்றத்தைத் தருவதாக அறியப்படுகிறது.


ஊட்டச்சத்து:-

கலோரி - 47
புரத சத்து - 4 கிராம்
நார்ச்சத்து - 2.00 கிராம்
இரும்பு சத்து - 4 மில்லி கிராம்
தயாமின் - 0.10 மில்லி கிராம்
கால்சியம் - 16 மில்லி கிராம்
பொட்டாசியம் - 129 மில்லி கிராம்
சோடியம் - 2 மில்லி கிராம்


வைட்டமின்:-

வைட்டமின் K, E, A.


நன்மைகள்:-

1. உடல் வலிமை அதிகரிப்பது மட்டுமில்லாமல், தலை முதல் கால் வரை உடல் முழுக்க ஆரோக்கியத்திற்கு துணை நிற்கும் சிறந்த உணவுகளில் அத்திப்பழமும் ஒன்று.
2. பார்க்கவும், ருசிக்கவும் அத்திப்பழம் சற்று வினோதமாக இருப்பினும், உடல் வலிமைக்கு அருமையானது.

3. அத்திப்பழத்தில் வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

4. உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்க அத்திப்பழத்துடன், பால் சேர்த்து குடித்து வாருங்கள்.

5. இரத்தசோகையில் இருந்து குணமடையலாம்.

6. தினமும் ஐந்து அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனையில் இருந்து தீர்வுக் காண முடியும்.

7. இதயத்தின் வலு அதிகரிக்க வேண்டுமா?, அத்திப்பழத்தை உலர்த்தி பொடி செய்து , காலை, மாலை இரண்டு வேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை அடையும்.


பக்க விளைவுகள்:-

1. உலர்ந்த அத்திப்பழத்தில் சர்க்கரை அளவு அதிகமாக நிறைந்துள்ளன, அதனால் அத்திப்பழத்தை அதிகமாக உட்கொள்வதால் சர்க்கரை நோய் உண்டாக்கும்.
2. அத்திப்பழத்தை அதிகமாக உட்கொள்வதால், அவை நம் உடலின் தேவையற்ற கழிவாகவே சேருகிறது. இதனால் எண்ணற்ற உடல் உபாதைகள் ஏற்படும்.


 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post