வரலாறு:-
நல்லெண்ணெய் என்று பரவலாக வழங்கப்படுவது, எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் நெய்யாகும். உண்மையில் எண்ணெய் என்பது எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறிக்கும் எனினும், எண்ணெய் என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணெய் என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. இது பொதுவாக சமையலுக்குப் பயன்படுகிறது. இதை தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் சீனர்கள், கொரியர்கள் மற்றும் சப்பானியர்கள் தங்கள் சமையலில் நல்லெண்ணெயை உபயோகிக்கின்றனர்.
ஊட்டச்சத்து:-
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
கொழுப்பு - 100.00 g
நிறைவுற்ற கொழுப்பு - 14.200 g
ஒற்றைநிறைவுறா கொழுப்பு - 39.700 g
பல்நிறைவுறா கொழுப்பு - 41.700 g
உயிர்ச்சத்து ஈ - 1.40 mg
உயிர்ச்சத்து கே - 13.6 mg
நன்மைகள்:-
நல்லெண்ணெயில் நோய் மற்றும் முதுமையைத் தடுக்கும் வைட்டமின் ஈயும், கொலஸ்டிராலைக் குறைக்கும் லெக்சிதின் என்ற பொருளும் உள்ளதால், உடலிலும் இரத்தக் குழாய்களிலும் கொழுப்புக் சேராது.
தொப்பை விழாது. இளமைத் தோற்றத்துடன் ஆரோக்கியமும் தொடர்கிறது.
நல்லெண்ணெய் நோயை முறிக்கும் முறிவு மருந்தாகும். நல்லெண்ணெயில் சமைத்த உணவுப் பொருட்கள் நீண்ட நேரம் கெடாமலிருப்பதைக் குடும்பத்தலைவிகள் அறிந்திருப்பார்கள்.
செசாமின் என்ற பொருள் நல்லெண்ணெயில் இருப்பதால், வாதம், இதய நோய் வராமல் முன்கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது.
இதனால் நமது குடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உப்புகள் நன்கு செரிக்கப்படுவது எளிதாகிறது.
சரும பாதுகாப்பு:
1. நல்லெண்ணெயை நன்கு சூடுபடுத்திப் பயன்படுத்தினால், நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும் மூலப்பொருட்களின் ஆற்றல் இந்த எண்ணெயில் உள்ளது. வாழ்க்கையில் வெறுப்பு, கவலை, மனச்சோர்வு முதலியவற்றைத் தடுக்கும் பைரோரெஸினால் என்ற அமிலப் பொருளும் நல்லெண்ணெயில் இருக்கிறது. உடல் நலத்தையும் தந்து, நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும் முதல் தர எண்ணெய் நல்லெண்ணெய்தான். நல்லெண்ணெய்க் குளியலால் தோல் மிருதுவாகிறது.
2. பண்டைய இந்திய மருத்துவரான சரகா மிகச்சிறந்த எண்ணெய் எள் எண்ணெய்தான் என்று கூறியுள்ளார். இரும்புச் சத்து, கால்சியம், பி-வைட்டமின்களும் இதில் உள்ளன. மூலத் தொந்தரவு, மாதவிலக்குத் தொந்தரவு, மூச்சுக்குழல் பிரச்சனைகள், தோல் தொல்லை முதலிய பிரச்சனை உள்ளவர்கள் எள்ளுருண்டையை தவறாமல் சாப்பிட்டு வரவும்.
Tags:
OIL