Guava - கொய்யாப் பழம் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

வரலாறு:-

கொய்யாப் பழம் என்பது வெப்ப மண்டலங்களிலும் துணை வெப்ப மண்டலங்களிலும் பயிரிடப்படும் பழமாகும். கொய்யா என பொதுவாக அறியப்படும் மரம் என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டதும் கொய்யா குடும்பத்தைச் சேர்ந்த சிறிய மரமாகும். இக்குடும்பத்தைச் சேர்ந்த இனங்கள் கொய்யா என்றே அழைக்கப்படுகின்றன. ஆனாலும் அவை மற்றைய இனங்களைச் சேர்ந்தவையாகும்


ஊட்டச்சத்து:-

கலோரி - 24
புரத சத்து - 0.04 கிராம்
நார்ச்சத்து - 0.36 கிராம்
இரும்பு சத்து - 0.02 மில்லி கிராம்
கால்சியம் - 3 மில்லி கிராம்
பாஸ்பரஸ் - 28 மில்லி கிராம்
மாவுசத்து - 11.6 கிராம்
கொழுப்பு - 0.30 கிராம்


வைட்டமின்:-

வைட்டமின் C.


நன்மைகள்:-

1. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது கொய்யா. உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்து கொய்யாப்பழத்தில் இருப்பதால், உடல் எடை அதிகரிக்காது. உடலுக்குத் தேவையான பலமும் கிடைக்கும்.

2. பொதுவாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், கொய்யாப்பழத்தைச் சாப்பிடலாம். டைப்-2 நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கும் கொய்யாப்பழம் உதவுகிறது.

3. கொய்யாப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற தாதுகள் மாரடைப்பைத் தடுப்பதற்கு உதவுகின்றன.

4. உடலுக்குள் இருக்கும் நஞ்சுகளை அகற்றுவது, பைட்டோநியூட்ரியன்ஸ், ஃபிளனாய்ட் போன்றவற்றின் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்கிறது கொய்யா.

5. தினமும் ஒரு கொய்யாப் பழத்தைச் சாப்பிடுவதன்மூலம் உடலில் ஏற்படும் வைட்டமின் சி குறைபாட்டைச் சரிசெய்ய முடியும். உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையும் அதிகரிக்கும்.


பக்க விளைவுகள்:-

பக்கவிளைவு இல்லை


 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post