ஊட்டச்சத்து:-
100 கிராம் அளவில்:
ஈரப்பதம் - 90 கிராம்
புரதம் - 2 கிராம்
கொழுப்பு - 1 கிராம்
தாதுச்சத்து - 2 கிராம்
நார்ச்சத்து - 1 கிராம்
கார்போஹைட்ரேட் - 3 கிராம்
கால்சியம் - 111 மி.கி.
பாஸ்பரஸ் - 45 மி.கி.
இரும்புச்சத்து - 15 மி.கி.
வைட்டமின்:-
வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் (Vitamin A,C,B)வைட்டமின்கள் உள்ளன
நன்மைகள்:-
1. பருப்புக் கீரையை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் வேனிற்காலத் தலைவலி, சூட்டால் உண்டாகும் தலைவலி ஆகியன குணமாகும்.
2. மலச்சிக்கலைப் (Constipation) போக்குகிறது, குடற்புழுக்களை (Worms) அகற்றுகிறது.
3. இரைப்பையில்(Gastric Gland) மிகுதியாக சுரக்கும் அமிலம் காரணமாக ஏற்படும் நெஞ்செரிச்சலை(Acidity) போக்குகிறது
4. தலைவலி (Head ache)உள்ளவர்கள் பருப்புக் கீரையை மைபோல் அரைத்து தலைக்கு பற்றுப்போட்டல் தலைவலி போகும்.
5. பாலுட்டும் (Breast Feeding) தாய்மார்களுக்கு சிறந்த ஊட்ட உணவு.
6. பித்தம் (Bile) அதிகம் உள்ளவர்கள். அடிக்கடி தலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்றது.
7. கல்லீரல்(Liver) நோய்கள் தீரும்
8. ஒமேகா 3 (Omega 3) உள்ள அற்புதக் கீரை பருப்புக் கீரை.
9. கால்சியம்(Calcium) சத்து குறைவாக உள்ளவர்கள் பருப்புக் கீரையைப் பயன்படுத்தினால் எளிதில் கால்சியம் கிடைக்கும்.
10. பருப்புக் கீரையை வேறோடு பிடுங்கி, புளியங்கொட்டை அளவு மஞ்சள் சேர்த்து அரைத்து எலுமிச்சங்காய் அளவு எடுத்துத் தயிரில் கலந்து 40 நாட்கள் காலையில் மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மரத்தல், கல்லீரல் புண், கல்லீரல் பெருத்தல் போன்ற நோய்களும் மண்ணீரல் நோய்களும் நீங்கிவிடும்.
11. பருப்புக் கீரையின் தண்டை அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் வேர்க்குரு, கைகால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் ஆகியவை குணமாகும்.
12. இந்தக் கீரையின் விதையை அரைத்து இளநீரில் கலக்கி உள்ளுக்குக் கொடுத்தால் சீதபேதியால் ஏற்படும் வயிற்றுளைச்சலும், முக்கலும் விலகும். மூத்திர எரிச்சலும் வெள்ளைப்படுதலும் கட்டுப்படும்.
13. இந்தக் கீரை குடல் புழுக்களை அகற்றுகிறது. மூல நோய் உள்ளவர்களுக்கு மலம் வலியில்லாமல் எளிதாகக் கழிய பருப்புக் கீரை உதவுகின்றது.
14. இது சிறுநீரைப் பெருக்கும். மூலநோயைக் குறைக்கும். பருப்புக் கீரையின் சாற்றைப் பிழிந்து 50 முதல் 100 மி.லி. அளவு வரை தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளும் வெறும் வயிற்றில் பருகி வந்தால் இரத்தபேதி, சீதபேதி, மூத்திரத் தடை, வெப்பம், நீர்ச்சுருக்கு ஆகிய நோய்கள் நீங்கி உடல் சூடு தணியும்.
15. பருப்புக் கீரை இலையை அரைத்துத் தீப்புண், கொப்புளம், வெந்நீர்க் கொப்புளம் ஆகியவற்றின் மீது பூசினால் எரிச்சல் தணிந்து புண் விரைவில் ஆறும். மஞ்சளுடன் இக்கீரையைச் சேர்த்து அரைத்துக் கட்டிகளில் பூசினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறி புண் ஆறும்.
பக்க விளைவுகள்:-
1. சிறுநீரகக் கோளாறு(Kidney Problems) உள்ளவர்கள். பித்தப் பையில் கல் உள்ளவர்கள். கபதேகிகள் இக்கீரையை குறைந்த அளவில் உண்டால் நல்லது. அதுவும் மிளகு அதிக அளவு சேர்த்து உண்பது நல்லது.
Tags:
SPINACH
