Veldt grape - பிரண்டை பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்


வரலாறு:-

இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. `Cissus quadrangularis’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட இது, கொடி வகையைச் சேர்ந்தது. சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை என பல வகைப்படும். இதற்கு, `வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு.


நன்மைகள்:-

1. இரைப்பை அழற்சி, அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற அனைத்து செரிமானம் பிரச்சினைகளுக்கும் பிரண்டை துவையல் மிகவும் சிறந்த மருந்தாக இருக்கிறது.

2. சிறிய சுளுக்கு மற்றும் எலும்பு முறிவுகளுக்கு பிரண்டை நல்ல தீர்வாக இருக்கிறது.

3. இந்த பிரண்டையின் சாற்றை, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கடாயில் வெப்பப்படுத்தி சுளுக்கு மற்றும் எலும்பு முறிவின் மேல் பயன்படுத்தலாம். இதனால் அந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

4. மூலம் மற்றும் குடற்புழு நீக்குவதற்கு பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது.

5. இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும்.

6. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும்.

7. எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.

8. பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.


 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post