Tropical amaranth - சிறுகீரை பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்


ஊட்டச்சத்து:-

சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, 90 சதவிகிதம் நீர்ச் சத்தும் மற்றும் புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுச் சத்து ஆகியவையும் இதில் உள்ளன. 100 கலோரி சக்தியைக் கொடுக்கவல்ல கீரை இது.


வைட்டமின்:-

வைட்டமின் ஏ, பி, சி


நன்மைகள்:-

1. சிறுகீரை சிண்டுக்கீரை இனத்தை சேர்ந்தது. இதன் தண்டுகள் பெரிதாக நீண்டும், இலைகள் சிறியதாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகக் கூடிய கீரை இது.

2. சிறுகீரையை விஷக்கடி முறிவாகப் பயன்படுத்தலாம்.

3. சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளை அகற்றவல்லது.

4. கண் எரிச்சல், கண் கட்டி, போன்ற பிரச்னைகள் குறையும்.

5. சிறுகீரையுடன் துவரம்பருப்பும். வெங்காயமும் சேர்த்து இந்தக் கீரையை நெய்யில் வதக்கிக் கடைந்து, தொடர்ச்சியாக 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறும்.

6. கல்லீரலுக்கு வலிமையை கொடுக்கும்.

7. சிறுகீரை உடலுக்கு அழகையும், முகத்துக்குப் பொலிவையும் தருகிறது.

8. ஆறாத புண்களை தீர்க்கிறது. கல்லீரல் நோய்களைத் தடுக்கிறது.

9. சிறுகீரை ரத்த சோகையை நீக்கும்.

10. மலச்சிக்கலை தீர்க்க வல்லது.


 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post