ஊட்டச்சத்து:-
கலோரிகள் - 90
கார்போஹைட்ரேட் - 21 கிராம்
புரதம் - 2 கிராம்
நார்ச்சத்து - 3கிராம்
சோடியம் - 36 மில்லிகிராம்
ஃபோலிக் அமிலம் - 6 மைக்ரோகிராம்
பேண்டோதெனிக் அமிலம் - 1 மில்லிகிராம்
கால்சியம் - 3 to 8 மில்லிகிராம்
மாங்கனீஸ் - 1 மில்லிகிராம்
கரோட்டினாய்டுகள் - 11.552 மைக்ரோகிராம்
பொட்டாசியம் - 475 மில்லிகிராம்
மாக்னீஷியம் - 27 மில்லிகிராம்
வைட்டமின்:-
வைட்டமின் ஏ - 19.218 %
வைட்டமின் பி - 61 மில்லிகிராம்
வைட்டமின் சி - 20 மில்லிகிராம்
வைட்டமின் ஈ - 1 மில்லிகிராம்
நன்மைகள்:-
1. ஆராய்ச்சி மூலம் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஆக்ஸிஜனேற்ற நிறமியாகிய பூநீலம் ஏராளமாக உள்ளது என்று நிருபிக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் குணம் கொண்டது.
2. இது கடின உலோகங்கள் மற்றும் பிராணவாயு உறுப்புக்களில் உண்டாகும் ஆபத்தை குறைக்கிறது.
3. ஆக்சிஜனேற்ற பண்புகள் சர்க்கரை வள்ளி கிழங்கின் சேமிப்பு நொதிகளை உற்பத்தி செய்கின்றது.
4. சர்க்கரை வள்ளி கிழங்கு சேதமடைந்து இருப்பின் தன்னுடைய பகுதிகளை சரிசெய்து கொள்ள ஆண்டிஆக்சிடெண்ட் திறனை பயன்படுத்தி சரிசெய்து கொள்கிறது.
5. சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, மினரல் சத்து, விட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுக்கள் ஆகிய அனைத்தும் நமது உடம்பில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புக்களை குறைக்கிறது.
6. சர்க்கரைவள்ளி கிழங்கு நீரிழிவு நோயாளிகளுக்கு, மிகவும் ஏற்ற சிறந்த உணவாகும். ஏனெனில் இது உடம்பில் இருக்கும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
7. சர்க்கரைவள்ளி கிழங்கில் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற மினரல் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இவை நமது உடலில் புற்றுநோய் கட்டிகள் உருவாகாமல் தடுக்கிறது.
8. சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் சத்துக்கள் நமது கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இவை நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
பக்க விளைவுகள்:-
சர்க்கரைவள்ளி கிழங்கை பச்சையாக அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் இருக்கும் சில மூலக்கூறுகள் புரதத்தை செரிமானம் செய்வதில் சிக்கலை ஏற்படுத்தி, வாயுத்தொல்லை பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
Tags:
TUBER