Strawberry - ஸ்ட்ராபெரி பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்


வரலாறு:-

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரான்சில் பிரிட்டானியில் முதல் தோட்டம் ஸ்ட்ராபெரி வளர்க்கப்பட்டது. ரோமானிய இலக்கியத்தில் ஸ்ட்ராபெரி பழம் அதன் மருத்துவ பயன்பாட்டிற்காக குறிப்பிடப்பட்டுள்ளது. 1364 முதல் 1380 வரையான பிரான்சின் அரசரான சார்லஸ் V, தனது அரச தோட்டத்தில் 1,200 ஸ்ட்ராபெரி தாவரங்களைக் கொண்டிருந்தார்.


ஊட்டச்சத்து:-

கலோரி - 46
புரத சத்து - 0.96 கிராம்
நார்ச்சத்து - 2.9 கிராம்
இரும்பு சத்து - 0.59 மில்லி கிராம்
கால்சியம் - 23 மில்லி கிராம்
சோடியம் - 1 மில்லி கிராம்
பொட்டாசியம் - 153 மில்லி கிராம்
சர்க்கரை - 4.9 கிராம்


வைட்டமின்:-

வைட்டமின் C, B6.


நன்மைகள்:-

1. ஸ்ட்ராபெரி பழத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இது சர்க்கரை நோய், புற்றுநோயை தடுக்கும் திறன் வாய்ந்தது.

2. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும்.

3. ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் C, தையமின்(Aneurin), ரிபோப்லாவின்(riboflavin), நியாசின்(Niacin), பேண்டோதெனிக்(pantothenic) அமிலம், ஃபோலேட்(folate) அமிலம், வைட்டமின் A, வைட்டமின் K போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கல்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

4. இதில் ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் கலங்களின்(Cells) அழிவை தடுக்கும் தன்மை உள்ளது. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

5. இதை சாப்பிட்டால் புற்றுநோய் வருவதைத் தடுக்கலாம். மேலும் இது இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது.

6. ஸ்ட்ராபெர்ரி பழச்சாற்றை குடித்தால் பற்களில் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம். இதில் உள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன.


பக்க விளைவுகள்:-

1. அளவுக்கு அதிகமா சாப்பிட்டால் இரத்த போக்கு நீட்டிப்பு ஆபத்து அதிகரிக்க கூடும்.


 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post