வரலாறு:-
முந்திரி அல்லது மரமுந்திரி என்பது, Anacardiaceae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். இம்மரமானது தென்னமெரிக்காவின் வடக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டிருப்பினும், பின்னர் 1560- 1565 ஆண்டளவில்போர்த்துக்கீசரால் இந்தியாவில் உள்ள கோவாவுக்கு எடுத்து வரப்பட்டு, பின்னர் தென்கிழக்கு ஆசியா, மற்றும் ஆப்பிரிக்காவுக்கு பரம்பல் அடைந்தது.
ஊட்டச்சத்து:-
கலோரி - 257
புரத சத்து - 3.06 கிராம்
நார்ச்சத்து - 10.3 கிராம்
இரும்பு சத்து - 1.11 மில்லி கிராம்
கால்சியம் - 24 மில்லி கிராம்
சோடியம் - 12 மில்லி கிராம்
பொட்டாசியம் - 660 மில்லி கிராம்
சர்க்கரை - 6 கிராம்
வைட்டமின்:-
வைட்டமின் A, C, B1, B2, B6, E.
நன்மைகள்:-
1. நாம் முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப்பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது. இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.
2. மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரி பழத்தில் ஐந்து மடங்கு அதிகமுள்ளது.
3. வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது.
4. கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகின்றது. இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்கள தயாரிக்கபடுகின்றன.
பக்க விளைவுகள்:-
1. அதிகமாக சாப்பிட்டால் வயிற்று பிரச்னை மற்றும் வாயு ஏற்படும்.
Tags:
FRUITS