Sesame - எள் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

 

வரலாறு:-

வறட்சியான பகுதிகளிலும் வளரக்கூடிய ஒரு சிறிய செடியும் அதன் விதையும். இதில் கறுப்பு, வெள்ளை, செந்நிறம் கொண்ட விதைகளைத் தரும் வெவ்வேறு வகைகள் உண்டு. அறிவியல் பெயர் (இலத்தீன்) செசாமம் இண்டிக்கம் (Sesamum indicum). நல்லெண்ணெய் இதன் (எள்ளின) விதைகளைப் பிழிந்து எடுக்கப்படுவது. எள்நெய் = எண்ணெய்.


ஊட்டச்சத்து:-

புரதமும் - 20%
எண்ணெய்யும் - 50%
மாப்பொருள் - 16%


நன்மைகள்:-

1. உடல் உட்புற உறுப்புகளுக்கு பலமும் சுறுசுறுப்பும் தரும். மூளைக்குத் தெளிவைத் தரும்.

2. பற்கள் ஈறுகள் தாடை இவற்றில் பலக் குறைவுள்ளவர் விதையை மென்று குதப்பிக் கொண்டிருப்பதாலும், நல்லெண்ணெய்யை வாயிலிட்டு குதப்பிக் கொண்டிருப்பதாலும் நன்மை பெறுகும்.

3. எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும் இதன் பூ கண்நோய்களை குணப்படுத்தும்.

4. இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.

5. இதன் காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டு சாம்பலாக்கி ஆறாத புண்கள் மீது தடவினால் புண்கள் ஆறும்.

6. எள்ளின் விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் அல்லது எள்ளு விதையை இலேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் மூல நோய் குறையும்.

7. தோலில் சொறி, சிரங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாகப் பூசினால் தோல் நோய்கள் அகலும்.

8. கறுப்பு எள்ளை நன்கு காயவைத்து, இலேசாக வறுத்துப் பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேவையான அளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் இரத்தச்சோகை விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.

9. வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் காலரா மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்.

10. எள்ளின் இலையையும் வேரையும் அரைத்துத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும். உடற்சூடு, தலைப் பாரம் குறையும்.


பக்க விளைவுகள்:-

எள்ளினை அதிகளவு எடுத்துக்கொண்டால் கரு கலையும் வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் கர்ப்ப காலத்தில் எள் அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.




 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post