வரலாறு:-
உளுந்து அல்லது உழுந்து (Urad bean, Vigna mungo) ஒரு தாவரம். இதலிருந்து கிடைக்கும் பருப்பு, உளுத்தம் பருப்பு எனப்படுகிறது. இது தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது.
ஊட்டச்சத்து:-
இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செம்புச்சத்து, மாங்கனீசு, செலீனியம் ஆகியவைற்றை அதிகளவு கொண்டுள்ளது. கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் ஆகியவையும் உள்ளன.
வைட்டமின்:-
வைட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), பி9(ஃபோலேட்டுகள்) மற்றும் மிகக்குறைந்தளவு வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன.
நன்மைகள்:-
உடல் வலு பெற:
கடும் நோயில் இருந்து மீண்டவர்களும் , உடல் பலவீனமானவர்களுக்கும் உளுந்து ஒரு வர பிரசாதம். இவர்கள் உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ, அரிசியுடன் கலந்தோ உண்டு வந்தால் தேகம் வலுவடையும். எலும்பு, தசை, நரம்புகள் ஊட்டமடைந்து உடல் வச்சிரமாகும்.
உடல் சூடு தணிய:
உடலின் பாதிக்கு மேற்பட்ட நோய்க்கு உடல் சூடு காரணமாக இருக்கின்றது.
மன அழுத்தம்:
ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு அதிகமாகிறது. சுக்கு, வெந்தயம், தவிடு நீக்காத பச்சரிசியுடன் உளுந்து சேர்த்து, பனை வெல்லம் கலந்து களி செய்து சாப்பிடால் உடல் சூடு தணியும்.
தாது விருத்தியாக:
உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும்.
உளுந்து வடை:
உளுந்து வடையை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம். அதனுடன் ஏதாவது தேங்காய் சட்னியோ, தக்காளி சட்னியோ இருந்தால் சொல்லவே வேண்டாம். சுட சுட சாப்பிட்டு கொண்டே இருக்கலாம். உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.
விழுந்தால் உளுந்து உண்:
தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.
இடுப்பு வலுப்பெற:
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும். உக்காந்து கொண்டே அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் வாரம் ஒரு முறையாவது உளுந்து கஞ்சி/களி சாப்பிடுங்கள்.
குழந்தைகளுக்கு:
சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.
சிறுநீர் பிரச்சனைகள்:
உளுந்து ஊற வைத்த நீரை மறுநாள் அதிகாலை அருந்தி வர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.
பொடுகு தொல்லை:
4 தேக்கரண்டி உளுந்து மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை தீரும்.
Tags:
CEREEALS
