வரலாறு:-
காடுகளில் தானாகவே வளர ஆரம்பித்த பச்சைப்பட்டாணி குளிர்காலத்தில் மட்டுமே வளரும். பச்சைப்பட்டாணியில் 1300 இனங்கள் இருந்தாலும் வீடுகளில் வளர்த்துச் சமைக்கப்படும் வகையே புகழ்பெற்றது. பச்சைப் பட்டாணிக்கு தோட்டப் பட்டாணி என்றும் பெயர் உண்டு. 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் பயன்படுத்திய பச்சைப் பட்டாணி இன்று உலகம் முழுவதும் பயிராகிறது.
ஊட்டச்சத்து:-
மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தயாமின், நியாஸின், ரிபோபிலவின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம்.
வைட்டமின்:-
வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘பி’, வைட்டமின் ‘சி’
நன்மைகள்:-
1. பச்சைப் பட்டாணியில் உடலுக்குத் தேவையான சத்துகளை கொடுக்கக்கூடிய தாதுச்சத்துகள் மற்றும், வைட்டமின்கள் அடங்கியுள்ளன. பச்சை பட்டாணி உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
2. இதில் உள்ள வைட்டமின் கே, எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது.
3. பச்சை பட்டாணி உடலுக்கு வலிமையையும், புத்துணர்ச்சியையும் தந்து,உடல் களைப்பை நீக்கும்.
4. பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ அடங்கியிருப்பதால், சரும ஆரோக்கியத்துக்கும் தெளிவான பார்வைக்கும் உதவுகிறது.
5. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘பி’, வைட்டமின் ‘சி’, நார்ப்பொருள்கள் முதலியவற்றால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற அபாயங்கள் இன்றி இளமைத் துடிப்புடனும் இளமையான தோற்றத்துடனும் நீண்ட நாள் ஆரோக்கியமாய் வாழலாம்.
6. பச்சை பட்டாணியில் கால்சியம், இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. எனவே, கர்ப்பிணிகள் தேவைக்கேற்ப எடுத்துக் கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு மண்டலக் குறைபாடுகள் வராது.
7. பச்சை பட்டாணிக்கு குடல் புண்களை ஆற்றும் சக்தி உள்ளது. எனவே, குடல் பிரச்சனை உள்ளவர்கள் பச்சைபட்டாணியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பச்சைபட்டாணியை விட முளை கட்டிய பச்சைபட்டாணி இன்னும் சத்தானது.
8. மாமிச உணவுக்கு மாற்றாகப் பச்சைப் பட்டாணியைச் சாப்பிட்டால் தேவையான சக்தி கிடைக்கும்.
Tags:
CEREEALS