வரலாறு:-
கசகசா (Papaver somniferum) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது சிறு செடியினத்தைச் சார்ந்தது. இதன் விதைதான் கசகசா. இந்த விதை மருத்துவ அரசன் என்று போற்றப்படுகிறது. இது சமையலிலும் பயன்படுத்தப் படுகின்றது.
ஊட்டச்சத்து:-
கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு
நன்மைகள்:-
1. தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது.
2. ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மை போல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும்.
3. 10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால், அம்மை வந்த தடம் மறைய தொடங்கும்.
4. வயிற்றுப் போக்கு ஏற்படும் பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு, நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப் போக்கு குறையும்.
5. வறண்ட சருமத்தைப் பாதுகாக்க கசகசாவை பொன் வறுவலாக வறுத்து, அரைத்து, முகத்தில் பூசலாம்.
6. மேலே சொன்னது போல் அரைத்து அதனுடன் கொஞ்சம் பைத்தம் பருப்பை சேர்த்து வருத்து அரைத்து புசலாம். இதனால் சருமம் பளபளப்பாகும்.
7. குளிப்பானங்களில் கசகசாவை இட்டும் அருந்த முடியும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.
பக்க விளைவுகள்:-
1. பலர் கசகசா சாப்பிட்டதும் கடுமையான வயிற்று வலியை அனுபவித்துள்ளனர். அதுவும் ஒப்பியேட்டின் தாக்கம் குறைந்ததும் வலி இன்னும் தீவிரமாகிவிடும். இது கசகசாவின் பொதுவான பக்க விளைவு.
2. கசகசாவால், அடுத்த நாள் காலையில் ஹாங் ஓவர் ஸ்டைலில் தலைவலியும் பலருக்கு ஏற்பட்டுள்ளது.
3. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்.
Tags:
TASTE PRODUCTS