ஊட்டச்சத்து:-
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
நன்மைகள்:-
1. குழந்தைகள் பிறந்தால் ஓமநீர் உள்ளுக்கு தருவார்கள் அது குழந்தைகளின் வாயு உபாதை, செரியாமை பசியின்மை போன்றவைகளை உடனடியாக சரிசெய்யும்.
2. ஓமம் கார்ப்புச்சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டது. பசியைத் தூண்டும், வாயுவை அகற்றும், அழுகலகற்றும், வெப்ப முண்டாக்கும், உடலை பலமாக்கும், உமிழ்நீரைப்பெருக்கும்.
3. ஓமத்தை உணவில் சேர்த்துக்கொண்டுவர, அஜீரணம், வயிற்று உப்புசம், அதிசாரம், சீத பேதி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
சளி, மூக்கடைப்பு குணமாக:
ஓமத்தை இலேசாக வறுத்து, இடித்துதூள் செய்து கொள்ள வேண்டும். 5 கிராம் அளவு தூளுடன், சிறிதளவு பச்சைக் கற்பூரப் பொடியுடன் கலக்குமளவிற்கு நன்றாக நசுக்கி பந்து போலத் துணியில் கட்டி, மூக்கால் நுகர வேண்டும்.
வாயு உபாதை குணமாக:
ஓமத்தை வறுத்து, பொடியாக்கி வைத்துக் கொண்டு 1/2 தேக்கரண்டி அளவு, வெந்நீரில், இரவில் உட்கொள்ள வேண்டும்.
வயிறு மந்தம் குணமாக:
ஓமம், சுக்கு, கடுக்காய்த்தோல் இவற்றைச் சம அளவாக எடுத்து, நன்கு தூளாக்கி, சலித்து வைத்துக்கொண்டு, 1/2 தேக்கரண்டி அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வேண்டும்.
வீக்கம் கரைய:
ஓமத்தை, தேவையான அளவு நீர்விட்டு, பசை போல அரைத்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து, வாணலியில் வைத்துச் சூடாக்கி, களிம்புபோலச் செய்து, வீக்கத்தின் மீது வைத்துக்கட்ட வேண்டும்.
வயிற்றுக்கடுப்பு, கழிச்சல் தீர:
ஓமம், மிளகு, வெல்லம் இவை ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து, நன்றாக இடித்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை வேளைகளில், 10 நாட்களுக்கு, வேளைக்கு 1.2 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவர வேண்டும்.
வயிற்றுவலி குணமாக:
ஓமத்தைச் சிறிது நீர்விட்டு அரைத்து, பசை போலச் செய்து, வயிற்றின் மீது பற்றுப் போட வேண்டும்.
Tags:
TASTE PRODUCTS