Chicory leaves - காசினிக் கீரையின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்


வரலாறு:-

இக்கீரைக்கு குளிர்ச்சியான தட்பவெப்பநிலை அவசியமாகும். மலைப்பிரதேசம்,குளிர்ச்சி பகுதிகளான கொடைக்கானல், ஏற்காடு, சேர்வராயன் மலைப்பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.மேலும் நல்ல குளிர்ச்சியான தோப்புப் பகுதிகளிலும் இக்கீரையை பயிரிடலாம். காசினிக்கீரையின் தாவரவியல் பெயர் 'சிக்கோரியம் இன்டிபஸ்' [Chicorium intybus] என்பதாகும். காபி பொடியில் கலக்கப்படும் சிக்கரி இச்செடியில் இருந்து தான் எடுக்கப்படுகிறது.


ஊட்டச்சத்து:-

காசினிக் கீரையில் கால்சியம், பொஸ்பரஸ், இரும்பு சத்து ஆகியவைகள் உள்ளன.


வைட்டமின்:-

வைட்டமின் A, B, C.


நன்மைகள்:-

1. ஜீரண கோளாறு, பித்தப்பை நோய், கல்லீரல் நோய்கள், இரத்த சோகை, சிறுநீரக நோய்கள், இருதய நோய்கள், வாத நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை உடையது என்று யுனானி மருத்துவம் சொல்கிறது.

2. உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது காசினிக் கீரை.

3. காசினிக் கீரை, தூதுவளைக் கீரையோடு பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து நன்றாக கடைந்து அல்லது மிக்ஸியில் இட்டு அரைத்து சாதத்துடன் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

4. உடல் காங்கை என்னும் உடல் சூடு தணிய இதுவே நல்ல கீரை என்கின்றனர் சித்தர்கள்.

5. பற்களுக்கு உறுதியையும், பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும்.

6. உடம்பில் அதிகம் நீர் சேர்வதால் உடம்பு பெருத்துக் காணப்படும். இவர்களுக்கு எந்த வகையான மருந்து கொடுத்தாலும் உடல் எடை குறையாது. இவர்கள் காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவதுடன் உடலை சீராக வைக்க உதவும்.

7. இந்தக் கீரையை நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

8. காசினிக் கீரை, சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபடவைக்கும்.

9. காசினிக்கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, தினமும் காலை வேளையில் ஒரு குவளை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

10. காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டுவர வெள்ளை படுதல் நோய் குணமாகும்.

11. காசினிக்கீரையை கடைந்து மதிய உணவில் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு குறையும்.

12. காசினிக் கீரையை நன்கு அரைத்து புண்ணின் மேல் கனமாக பற்றுபோட்டு கட்டிவந்தால் வெகுவிரைவில் புண்கள் ஆறிவிடும். இதன் வேர் காய்ச்சலைப் போக்கி உடலுக்கு வலு கொடுக்கும். அதிக உயிர்ச்சத்து கொண்ட கீரை இது.

13. காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் வேகவைத்து கடைந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

14. தாதுவை விருத்தி செய்யும் குணம் காசினிக் கீரைக்கு உண்டு.


 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post