Garbanzo beans - கொண்டை கடலை பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்



வரலாறு:-

கொண்டைக்கடலையானது மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. சுமார் 7000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டைக்கடலை பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. கிமு 3000–ல் இது முறையாக பயிர் செய்யப்பட்டது. முதலில் மத்தியதரைக்கடல் பகுதியில் பயிர் செய்யப்பட்ட இப்பயிரானது பின்னர் இந்தியாவிற்கும் எத்தோப்பியாவிற்கும் பரவியது. எகிப்திய, கிரேக்க மற்றும் ரோமானிய நாகரீகங்களில் இது மிகவும் பிரபலமாக இருந்தது. 16-ம் நூற்றாண்டில் மிதவெப்ப மண்டலப்பகுதிகளுக்கு ஸ்பானியர்கள் மற்றும் போர்த்துகீசியர்களாலும், வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியர்களாலும் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், துருக்கி, எத்தோப்பியா மற்றும் மெக்ஸிகோ இன்றைக்கு அதிகளவு கொண்டைக்கடலையை உற்பத்தி செய்கின்றன.


ஊட்டச்சத்து:-

நார்ச்சத்துக்கள், புரோட்டீன், இரும்புச்சத்து


வைட்டமின்:-

வைட்டமின் பி9 (ஃபோலேட்டுகள்), பி1 (தயாமின்), பி6(பைரிடாக்ஸின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி3 (நியாசின்), பி2 (ரிபோஃப்ளோவின்), ஏ, சி, இ, கே.


நன்மைகள்:-

எடையைக் குறைக்கும்:
ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை உடல் எடை குறைய உதவி புரியும். அதிலும் இதனை தினமும் 1/2 கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல், அதனால் கண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல், உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்.

இதய நோய்:
ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆந்தோசையனின்கள், டெல்பின்டின், சியானிடின், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் போன்றவை உள்ளது. மேலும் இதில் ஃபோலேட் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இதனால் இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் தங்கி அடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறையும்.

கொலஸ்ட்ரால் குறையும்:
ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறையும். அதற்கு தினமும் 3/4 கப் ப்ரௌன் நிற கொண்டக்கடலையை வேக வைத்து சாப்பிட்டு வாருங்கள்.

இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்:
ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் உள்ள கரையும் நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுன் வைக்கும். மேலும் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இதனால் அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடைந்து மெதுவாக செரிமானமாகும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படும். அதிலும் ஒரு வாரம் தினமும் 1/2 கப் கொண்டக்கடலையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

செரிமான பிரச்சனைகள்:
தினமும் இரவில் படுக்கும் போது ப்ரௌன் நிற கொண்டக்கடலையை ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை சாப்பிட்டு வந்தால், அதனால் செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

இரும்புச்சத்து:
ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அவை இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பைத் தடுத்து, உடலில் எனர்ஜியை அதிகரிக்கும்.

மலச்சிக்கல்:
மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், இரவில் ஊற வைத்த கொண்டக்கடலையை பச்சையாக சாப்பிடுவதோடு, அந்த நீரை குடித்து வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.


 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post