ஊட்டச்சத்து:-
பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு ஆகிய தாதுப்பொருல்கள் அதிக அளவில் இருக்கின்றன. இதில் தாமிரச்சத்து, மணிச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தயமின், ரிபோஃப்ளேவின், நிகோடினிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம், புரதம், தாது உப்புக்கள், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கந்தகம், குளோாின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.
வைட்டமின்:-
வைட்டமின் ஏ மற்றும் சி
நன்மைகள்:-
1. தண்டுக்கீரை உடலின் கொழுப்பைக் குறைக்கும் ஆற்றலுடையது. உடல் பருமனை குறைக்க விரும்புவோர், வாரம் ஒரு முறை தண்டுக்கீரை சாப்பிடுவது நல்லது.
2. குடல் புண் உள்ளவர்கள் இந்தக் கீரையை மசியலோ அல்லது லேசாக வதக்கியோ உணவுடன் எடுத்துக் கொள்வது சிறந்தது.
3. தண்டுக்கீரை மூல நோய்க்கு மிகவும் சிறந்தது.
4. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் சிவப்பு நிற தண்டு கீரையை உணவுடன் எடுத்துக்கொண்டால், மாதவிடாய் வலி சற்று குறையும்.
5. பெண்களின் கருப்பை கோளாருகளுக்கும் இந்த வகைக் கீரை நல்லது.
6. இந்த கீரை ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தண்டுக்கீரையில் நோய் தாடுப்பு சக்தி மிகுதியாக உள்ளது.
7. தண்டுக்கீரை மலச்சிக்கலை குணமாக்க வல்லது.
8. இது இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி, வயிற்று ரணம், உள் அழல், மூத்திர கிருச்சிர நோய்களைக் குணப்படுத்த வல்லது.
9. கல்லீரல், நீர்த் தாரையில் அடைபட்ட கற்களை எாித்து விடும் தன்மையுள்ளது.
10. சொிமான சக்தி, கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. மூளை வளர்ச்சியையும், ஞாபக சக்தியையும் உண்டு பண்ணக் கூடியது.
11. முதுகெழும்பை பலப்படுத்துகிறது. பசியைத் துாண்டக் கூடியது. எலும்பு மஜ்ஜை ( உள் மூளை ) வளர்க்கிறது. இரத்தத்தை சுத்திகாிக்கக் கூடியது. மலச்சிக்கலுக்கும் சிறந்தது.
12. குடல் புண்களை ஆற்றும், கட்டிகளைக் கரைக்கும், இருதய பலவீனத்தைப் போக்கும்.
13. இரத்ததில் உள்ள கொழுப்பைக் கரைக்கும், மூச்சுக் குழல், குடல் போன்றவற்றி்ல் ஏற்படும் தடைகளை நீக்கவும், பித்தத்ைத நீக்கும் சக்தி படைத்தது.
14. மனிதனின் ஆக்ரோஷ குணத்தைப் படிப்படியாகக் குறைக்கவல்லது.
Tags:
SPINACH