Fenugreek - வெந்தயம் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்


ஊட்டச்சத்து:-

நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம் போன்றவைகள் உள்ளன


வைட்டமின்:-

வைட்டமின் சி,வைட்டமின் ஏ.


நன்மைகள்:-

1. குழந்தை பெற்ற பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரப்பு அதிகரிக்கும்.

2. வெந்தயத்தை வறுத்து, அதனுடன் வறுத்த கோதுமையை சேர்த்து, டீ, காபிக்கு பதிலாகா அருந்தி வந்தால், உடல் வெப்பம் குறையும்.

3. வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்வது நிற்கும்.

4. வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.

5. வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.

6. வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, இருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.

7. மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.

8. வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து சாப்பிட்டு வர அது மலசிக்களைப் போக்கும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்.

9. வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.

10. வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.


பக்க விளைவுகள்:-

1. பெண்கள் அதிக அளவில் வெந்தயத்தை எடுத்து கொள்வதினால் அவர்களுக்கு ஏற்படும் மிக முக்கியமான பிரச்சனை வாந்தி மற்றும் குமட்டல். எனவே வெந்தயத்தை தினமும் 2 முதல் 5 கிராம் வரை இரு முறை எடுத்துக் வெந்தயத்தை எடுத்து கொள்ளலாம்.

2. பெண்களுக்கு அதிக அளவில் வயிற்று உபாதைகள் வருவதற்கு காரணம் வெந்தயம் சாப்பிடுவதே. மேலும் வெந்தயத்தை அதிகமாக ஒரே நேரத்தில் எடுத்து கொண்டால் வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே முடிந்தவரை வெந்தயத்தை அளவாக எடுத்து கொள்வது சிறந்தது.

3. உடலில் உள்ள சர்க்கரையின் அளவை வெந்தயம் குறைத்து விடும். மேலும் சர்க்கரை நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்களாக இருந்தால் வெந்தயம் உட்கொள்ளும்முன் உங்கள் மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது. ஏனெனில் மாத்திரைகளுடன் சேர்த்து வெந்தயமும் சாப்பிடும் போது சர்க்கரையின் அளவை மிகவும் குறைத்துவிடும்.

4. பெண்களின் கர்ப்பப்பையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சப்போனின் என்னும் வேதிப்பொருள் வெந்தயத்தில் அதிக அளவு காணப்படுவதால் கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக வெந்தயத்தை சேர்த்துக்கொள்ளக்கூடாது.


 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post