ஊட்டச்சத்து:-
100 கிராம் சாமை:
புரத சத்து - 7.7 கி
கொழுப்பு சத்து - 4.7 கி
தாது உப்புகள் - 1.5 கி
நார்ச்சத்து - 7.6 கி
மாவுச்சத்து - 67 கி
கால்சியம் - 17 மி கி
பாஸ்பரஸ் - 220 மி கி
இரும்புச்சத்து - 9.3 மி கி
நன்மைகள்:-
1. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து.
2. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை.
3. இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
4. சாமையில் இரும்பு சத்து அளவிட்டால் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகம்.
5. இது இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது.
6. நோய்களுக்கெல்லாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலை தீர்க்கிறது சாமை.
7. வயிற்றுக் கோளாறுக்கு சாமை நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது.
8. தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.
9. எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.
10. இது மலச்சிக்கலைப் போக்க வல்லது.
11. இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.
Tags:
CEREEALS