வரலாறு:-
சோயா அவரை கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு அவரை இனத் தாவரம். ஆண்டுத் தாவரமான இது, சீனாவில் உணவாகவும், மருந்துகளிலும் 5,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பட்டு வருகின்றது.
ஊட்டச்சத்து:-
கார்போஹைட்ரேட் - 20.9 சதவிகிதம்
கல்சியமும் - 240 மி.கி
பாஸ்பரஸ் - 690 கிராம்
இரும்புச் சத்தும் - 10.4 சதவிகிதம்.
வைட்டமின்:-
வைட்டமின் E.
நன்மைகள்:-
1. எடையைக் குறைப்பதில் சோயாவுக்கு முக்கிய பங்குண்டு.
2. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை விரட்டுவதில் சோயா உதவும்.
3. இதயத்துக்கும் நல்லது. சோயாவிலிருந்து பெறப்படுகிற ப்ரோபயாட்டிக் தயிரில் உள்ள ஈஸ்ட், செரிமானத்துக்கு மிகவும் நல்லது.
4. விளையாட்டு வீரர்களுக்கு புரதத்தின் தேவை அதிகம். அதை ஈடுகட்ட சோயா சிறந்த உணவு.
5. மெனோபாஸ் காலக்கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைய ஆரம்பித்து, சினைப்பைகளின் செயல்திறனும் மங்கும். வாரத்தில் 5 நாட்கள் சோயா மில்க் எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
6. சோயா பயறை ஊற வைத்து, முளைகட்டச் செய்து, சுண்டலாகச் செய்து சாப்பிட்டால், ஈஸ்ட்ரோஜென் மற்றும் விட்டமின் E தேவை பூர்த்தியாகும்.
7. பச்சைப்பயறில் 56.7 சதவிகிதமும், ராஜ்மாவில் 60 சதவிகிதமுமாக உள்ள கார்போஹைட்ரேட், சோயாவில் மட்டும்தான் 20.9 சதவிகிதம். எனவேதான் எடைக் குறைப்புக்கு உதவும் உணவுகளில் சோயாவுக்கு முக்கிய இடமிருக்கிறது. எடையைக் குறைக்க நினைப்போர், கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது முதன்மையான விதி.
8. மற்ற பருப்புகளில் இல்லாத அளவு அதிக கல்சியமும் (240 மி.கி.), பாஸ்பரஸ் சத்தும் (690 கிராம்) சோயாவில் உண்டு. இந்த இரண்டும் இதய நோய் பாதித்தவர்கள், குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அவசியம் தேவை.
9. இரும்புச் சத்தும் மற்ற பருப்புகளைவிட, சோயாவில் சற்றே அதிகம். அதாவது, 10.4 சதவிகிதம்.
பக்க விளைவுகள்:-
1. ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகம் என்பதால், ஆண்கள் சோயா அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
2. தசைகளை பில்டப் செய்ய ஜிம் செல்பவர்களை தினமும் 100 கிராம் சோயா எடுக்கச் சொல்வார்கள். ஆனால், அப்படி எடுப்பது செரிமானத்தைப் பாதிக்கும். காலை வேளைகளில் 25 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். இது முற்றிலும் புதிய உணவு என்பதால் இரவில் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
Tags:
CEREEALS