ஊட்டச்சத்து:-
100 கிராம் பாதாம் பருப்பில்:
புரதச் சத்து - 19.5 கி
ரிபோபிளேவின் பி2 - 1.4 மி.கி
நியாசின் பி3 - 0.9 மி.கி
பேன்டோதினிக் பி5 அமிலம் - 0.47 மி.கி
போலேட் - 29
கால்சியம் - 250 மி.கி
இரும்புச்சத்து - 3.9 மி.கி
மெக்னீசியம் - 260 மி.கி
மேங்கனீசு - 2.29 மி.கி
பொட்டாசியம் - 740 மி.கி
சோடியம் - 5.0 மி.கி
ஜிங்க் - 3.7 மி.கி
கலோரி மதிப்பு - 598
வைட்டமின்:-
வைட்டமின் ஏ - 2.0
வைட்டமின பி1 (தையமின்) - 0.19 மி.கி
வைட்டமின் ஈ - 26.2 மிகி
வைட்டமின் பி6 - 0.14 மி.கி
நன்மைகள்:-
1. பாதாமில் உள்ள கொழுப்பு, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கொழுப்பாகும்.
2. 25 கிராம் பாதாமில் ஒரு நாளைக்குத் தேவையான 70 சதவீத வைட்டமின் ஈ உள்ளது. மற்ற பருப்புகளை விட பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது. அதோடு சேர்த்து, புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் - பி 17 என்ற சத்தும் பாதாமில் உள்ளது.
3. மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது.
4. பாதாம் பருப்புகளை தினமும் சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு நரம்புகள் வலுவடையும். உயிரணுக்கள் அதிகரித்து மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு குறைபாடுகள் நீங்கும்.
5. பாதாம் பருப்புகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சத்துக்கள் இல்லை. எனவே இப்பருப்புகளை அதிகம் உண்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.
6. பாதாம் பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது.
7. பாதாம் பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிகளவு உள்ளன. பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனையும் போக்குகிறது.
8. பெண்களுக்கு பேறு காலத்தில் சத்து நிறைந்த உணவுகள் கொடுக்க வேண்டியது அவசியமாகும். பாதாம் பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு வருவது, அவர்களுக்கும் அவர்கள் வயிற்றில் வளரும் கருவிற்கும் நன்மையை அளிக்கும்.
9. உடலில் நோய் எதிர்ப்பு வேதிப்பொருட்கள் ரத்தத்தில் ஏற்கனவே உள்ளன. பாதாம் பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரித்து ஜுரம், வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மை காக்கிறது.
பக்க விளைவுகள்:-
1. அதிகப்படியான பாதாம் நாம் எடுத்துக் கொள்ளும் போது அது செரிமானம் அடைய அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். அதோடு பிற உணவுகளையும் செரிமானம் ஆவதை தடுக்கும் . இதனால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற தொல்லைகள் ஏற்படக்கூடும்.
2. ஒரு நாளில் நமக்கு 15மில்லி கிராம் வரையிலான விட்டமின் இ போதுமானது. பாதாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் விட்டமின் இ நம் உடலில் 1000 மில்லி கிராம் வரையிலும் அதிகரித்து விடும். இதனால் வயிற்றுப் போக்கு, தலைவலி,உடற்சோர்வு ஆகியவை ஏற்படும்.
3. பாதாம் அதிகளவு சாப்பிடுவதால் ஏற்படுகிற பின்விளைவுகளில் மிகவும் முக்கியமானது இது தான். ஆம், அளவு தெரியாமல் அதிகளவு பாதாம் எடுத்துக் கொள்வதால் அது நம் உடல் எடையை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. பாதாம் சாப்பிடுவதால் கிட்டத்தட்ட 2000 கலோரிகள் வரை கூடுதலாக நம் உடலில் சேரும் வாய்ப்பு உண்டு.
Tags:
CEREEALS