Kiwi fruit - கிவி பழம் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்


வரலாறு:-

கிவி பழம் அல்லது பசலிப்பழம் என்பது தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழம் ஆகும். இதை நாம், கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். பழத்தின் சுவை புளிப்பு அல்லது துவர்ப்பாக இருக்கலாம். பசலிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


ஊட்டச்சத்து:-

கலோரி - 42
புரத சத்து - 0.79 கிராம்
நார்ச்சத்து - 2.1 கிராம்
இரும்பு சத்து - 0.21 மில்லி கிராம்
கால்சியம் - 23 மில்லி கிராம்
சோடியம் - 3 மில்லி கிராம்
பொட்டாசியம் - 392 மில்லி கிராம்
சர்க்கரை - 9 கிராம்


வைட்டமின்:-

வைட்டமின் A, K, E, B, C.


நன்மைகள்:-

1. பசலிப்பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில் உள்ளது. எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் இக்கனியைப் பயமின்றி உண்ணலாம்.

2. பசலிப்பழத்தில் வைட்டமின் சி’ அதிக அளவில் உள்ளது. நோயைத் தடுக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது.

3. நம் உடம்பில் கட்டுப்பாடில்லாமல் திரியும் `ராடிக்கிள்கள்’தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவுக்கும் காரணமாக அமைகின்றன. இத்தகைய `ராடிக்கிள்களின்’ கடும்தன்மையை அழித்து, நோயின்றி நம்மைக் காக்கும் ஆற்றல் பசலிகனிக்கு இயற்கையாக உள்ளது.

4. முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான கண் புரை, விழித்திரைச் சிதைவு நோயைத் தடுக்கிறது.

5. இதயத் துடிப்பில் சீரற்ற நிலையைத் தடுக்கத் துணைபுரிகிறது. இதயத்தின் துடிப்பைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் பொட்டாசியச் சத்து குறைந்தால் இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். பசலிப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இதயத் துடிப்பைச் சீராக வைக்கிறது. மாரடைப்பையும் தடுக்கிறது.


பக்க விளைவுகள்:-

1. மெதுவாக ரத்தம் உரைத்தல் மற்றும் ரத்த போக்கு அதிகரிக்க கூடும்.


 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post