Eddosfood - சேப்பங்கிழங்கின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்


வரலாறு:-

சேப்பங்கிழங்கின் தாயகம் தென்இந்தியா என்று கருதப்படுகிறது. இந்தியாவிலிருந்து இது சீனா, மியான்மார், இந்தோனேசியா நாட்டிற்குப் பரவியது. அங்கியிருந்து ஜப்பான், ஹவாய், மெலனேசியா, பொலினேசியா ஆகிய இடங்களுக்குப் பரவியது. வரலாற்று காலத்தில் இது எகிப்து, மத்தியதரைக்கடல் நாடுகள், ஆப்பிரிக்கா, கரீபின், பாப்பு நியூகினிவா உள்ளிட்ட இடங்களுக்குப் பரவியது.
வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலங்களில் இது செழித்துப் பரவியது. இன்றைக்கு இது மேற்கு இந்திய தீவுகள், மேற்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய சீனா ஆகிய இடங்களில் இது அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் குறைந்த இடங்களில் மட்டும் பயிர் செய்யப்படுகிறது. பசிபிக் தீவுகள் மற்றும் பாப்பு நியூகினியாவில் இது நிரந்தர உணவாக உள்ளது.


ஊட்டச்சத்து:-

கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை காணப்படுகின்றன


வைட்டமின்:-

வைட்டமின் இ மற்றும் பி6 (பைரிடாக்ஸின்) அதிகளவும், வைட்டமின் ஏ, சி, கே, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி9 (ஃபோலேட்டுகள்) ஆகியவையும் உள்ளன.


நன்மைகள்:-

1. சேப்பங்கிழங்கில் நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் உள்ளது. இந்நார்ச்சத்தானது சிறுகுடலால் செரிக்கப்படுவதில்லை. பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு நார்ச்சத்து உணவாவதுடன் அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

2. சேப்பங்கிழங்கில் உள்ள பொட்டாசியம் சவ்வு மற்றும் திசுக்களுக்கு இடையில் திரவப்பரிமாற்றம் நடைபெற உதவுகிறது.

3. மேலும் பொட்டாசியமானது குழல்விரிப்பியாக செயல்பட்டு இரத்தக்குழாய்கள் மற்றும் இரத்தநாளங்களில் உண்டாகும் அழுத்தத்தை குறைக்கிறது.

4. சேப்பங்கிழங்கில் உள்ள பீட்டா கரோடீன், கிரிப்டோசாந்தைன் உள்ளிட்ட பைட்டோ-நியூட்ரியன்கள் பார்வை நலத்தினை மேம்படுத்த உதவுகின்றன.

5. சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் ஏ மற்றும் இ சருமத்தினைப் பாதுகாக்க உதவுகிறது. இவ்விட்டமின்கள் காயங்களை விரைந்து ஆற்றுவதோடு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கின்றன. இவ்விட்டமின்கள் சருமத்திற்கு பளபளப்பையும் உண்டாக்குகின்றன.

6. சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கின்றன. இவை இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலுக்குள் நோய்க்கிருமிகள் செல்வதைத் தடைசெய்கின்றன.

7., சேப்பங்கிழங்கில் உள்ள இரும்பு மற்றும் செம்புச்சத்துகள் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

8. சேப்பங்கிழங்கில் உள்ள செம்புச்சத்து, துத்தநாகம், கால்சியம், மாங்கனீசு உள்ளிட்டவைகள் எலும்புகள் தேய்மானம் அடைவதையும், ஆஸ்டியோபோரோஸிஸ் எனப்படும் எலும்புத் தேய்மானம் நோய் ஏற்படுவதையும் தடுக்கிறது.

9. சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் பி1(தயாமின்) கவனம், ஆற்றல் ஆகியவற்றை அதிகரித்து, நாள்பட்ட மனஅழுத்தம், மறதி ஆகியவற்றைத் தடைசெய்கிறது.


பக்க விளைவுகள்:-

சேப்பங்கிழங்கினை அப்படியோ பச்சையாக உண்ணக் கூடாது. இதனை அவித்தோ உண்ண வேண்டும். இதில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகமாக இருப்பதால் இதனை அளவாக உண்பது நலம்.



 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post