வரலாறு:-
கறிவேப்பிலை அல்லது கருவேப்பிலை (curry leaf) என்று அழைக்கப்படும் இது, பலமருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சமைக்கப்படுகின்ற பலவிதமான உணவுப் பதார்த்தங்களில் சுவைகூட்டும் பொருளாகவும், மணத்திற்காகவும் பிரசித்தி பெற்றவையாகும். இதன் தாவரவியல் பெயர், முறயா கொயிங்கீ (Murraya koenigii) என்றழைக்கப்படுகின்ற இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவையாகும். இலை, ஈர்க்கு, பட்டை, வேர் வாசனைப் பொருளாக மட்டுமன்றி, கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும்.
ஊட்டச்சத்து:-
நீர்ச்சத்து – 0.66%
புரதம் – 6.1%
கொழுப்பு – 0.1%
மாவுச்சத்து – 0.16%
நார்ப்பொருள் – 6.4%
தாது உப்புக்கள் - 4.2 %
வைட்டமின்:-
வைட்டமின் எ, பி.
நன்மைகள்:-
1. ஆயுர்வேத மருத்துவத்தில் கருவேப்பிலை சிறந்த நோய் நிவாரணி. இது நீரிழிவை எதிர்க்கும், நுண்ணுயிர் கொல்லியாகும். கருவேப்பில்லையின் வேர் உடல் வலிகளைப் போக்கும். பட்டையோ பாம்பு கடியைக் குணமாக்கும்.
வயிற்றுப்போக்கினை நிறுத்தும்:
அறிவியல் ஆராய்ச்சி, கருவேப்பில்லையில் வயிற்றுப்போக்கினை நிறுத்தும் சத்துகள் இருப்பதாக கண்டுப்பிடித்துள்ளது. கருவேப்பிலை கொத்தினை அரைத்துச் சாப்பிடலாம் அல்லது அதன் சாற்றைக் குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
கல்லீரலைப் பாதிப்பிலிருந்து காப்பாற்றும்:
உங்களைக் கல்லீரலைப் பாதிக்கும் விசயங்களை நீங்கள் செய்தால் கருவேப்பிலையைக் கண்டிப்பாக சாப்பிடவேண்டும். உடம்பில் உருவாகும் நச்சுகள் கல்லீரலைப் பாதிக்காமல் இருக்க கருவேப்பிலை உதவுகிறது என அறிவியல் கூறுகிறது. அதோடு நல்ல முறையில் இயங்க அது உதவுகிறது.
நீரிழிவு நோயைத் தடுக்கிறது:
கருவேப்பிலை உடம்பில் உள்ள இனிப்பின் அளவினைக் கட்டுப்படுத்துகிறது. இதற்கு காரணம் இலையில் உள்ள நார்ச்சத்துகள் தாம். நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால் உடலின் இனிப்பு அளவைக் கட்டுப்படுத்த கருவேப்பிலையைப் பயன்படுத்துங்கள்.
பக்க விளைவுகள்:-
இல்லை
Tags:
LEAVES