Palmyra roots - பனங்கிழங்கின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்


வரலாறு:-

முதன் முதலில் இது பிரேசில் போன்ற நாடுகளில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது இது அதிகமாக கோஸ்ட்டா ரிக்கா நாடுகளில் காணப்படுகிறது. ஆசியா நாடுகளிலும் இது பெருமளவு காணப்படுகிறது. பனம் விதைகள் முளைக்கும்போது, நிலத்துட் செல்லும் வேரில் மாப்பொருள் சேமிக்கப்பட்டுக் கிழங்கு உருவாகின்றது. இதுவே பனங்கிழங்கு ஆகும்.ஒரு முனை கூராகவும், மறு முனை சுமார் ஒரு அங்குலம் விட்டம் கொண்டதாகவும் உள்ள ஒடுங்கிய கூம்பு வடிவான இக் கிழங்கு ஒரு அடி வரை நீளமானது.


ஊட்டச்சத்து:-

100 கிராம் பனையில்:
கலோரிகள் - 115
கார்போஹைட்ரேட் - 25.6 கிராம்
நார்ச்சத்து - 1.5 கிராம்
சர்க்கரை - 17.2 கிராம்
புரோட்டீன் - 2.7 கிராம்
கொழுப்பு - 0.2 கிராம்
ஒமேகா - 13 மில்லி கிராம்
கொழுப்பு அமிலங்கள் -3 மில்லி கிராம்
தயமின் - 0.1 மில்லி கிராம்
ரிபோப்ளவின் -0.2 மில்லி கிராம்
நியாசின் - 0.9 மில்லி கிராம்
போலேட் - 624 மைக்ரோ கிராம்
கால்சியம் - 18 மில்லி கிராம்
இரும்புச் சத்து -1.7 மில்லி கிராம்
மக்னீசியம் - 10 மில்லி கிராம்
பாஸ்பரஸ் - 140 மில்லி கிராம்
பொட்டாசியம் - 1806 மில்லி கிராம்
சோடியம் - 14 மில்லி கிராம்
ஜிங்க் - 3.7 மில்லி கிராம்
காப்பர் - 0.6 மில்லி கிராம்
செலினியம் -0.7 மைக்ரோ கிராம்
தண்ணீர் - 69.5 கிராம்

வைட்டமின்:-

வைட்டமின் ஏ
வைட்டமின் சி - 8 மில்லி கிராம்
வைட்டமின் ஈ - 0.5 மில்லி கிராம்
வைட்டமின் பி - 0.8 மில்லி கிராம்


நன்மைகள்:-

1. பனங்கிழங்கு குளிர்ச்சியினை தரக்கூடியது. மலச்சிக்கலை தீர்க்கும்.

2. பனங்கிழங்கினை வேகவைத்து சிறுசிறு துண்டாக நறுக்கி கயவைத்து அதனுடன் கருப்பட்டியினை சேர்த்து இடித்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்தானது கிடைக்கும்.

3. இதனுடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிடும் போது உடல் உறுப்புகள் பலம் பெறும்.

4. கர்ப்பப்பை பலம் பெறும்.

5. பனங்கிழங்கு வாயு தொல்லையுடையதால், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து மாவாக்கி சாப்பிட்டால் இதனை தவிர்க்கலாம்.

6. பனங்கிழங்கில் நார்சத்தானது உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும்.

7. பனங்கிழங்கினை மாவாக்கி ஓட்ஸ் தயாரித்து குடித்தால் பசி தீரும். நோய்களும் கட்டுப்படும்.

8. பனங்கிழங்கினை பூமியில் இருந்து பிரித்தெடுக்கும் போது கிடைக்கும் தவின்னை சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி குணமாகும்.


 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post