வரலாறு:-
பலாப்பழம் எங்கு தோன்றியது என்பது பற்றி சரியான குறிப்புகள் ஏதுமில்லை. எனினும், அது இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது. தென்னிந்தியாவில், மாம்பழம் மற்றும் வாழைப்பழத்துக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது பலா ஆகும். இந்தியாவில், 2000ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, சுமார் 14,286 ஏக்கர் பரப்பளவில், சுமார் 1,00,000 பலா மரங்கள் இருக்கிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து:-
கலோரி - 185
புரத சத்து - 7 கிராம்
நார்ச்சத்து - 1.5 கிராம்
கால்சியம் - 14 மில்லி கிராம்
வைட்டமின்:-
வைட்டமின் A, C.
நன்மைகள்:-
1. பலாப்பழத்தில் வைட்டமின்களும், பிற சத்துப் பொருட்களும் கணிசமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கும், வலிமை பெறவும் ஒப்பற்ற பழம் பலாப்பழம்.
2. சருமத்தை பளபளப்பாக வைக்கும் சிறப்புக் குணம் பலாப்பழத்திற்கு உண்டு.
3. பல் உறுதி பெற, ஈறு கெட்டியாக இருக்க, பலாப்பழம் சாப்பிட வேண்டும்.
4. உடம்பில் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்தில் இருக்கிறது.
5. எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை பலாப்பழத்திற்கு உள்ளது என ஜெர்மனி, அமெரிக்காவில் மேற்கொண்ட ஆரம்ப நிலை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து இதுபற்றிய ஆராய்ச்சி நடந்து வருகிறது.
6. பலாப்பழ பானகம்(For the syrup) உடம்புக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மையது.
7. உடலில் உள்ள தசைகளை சிராக இயங்க வைக்கும் ஆற்றல் பலாப்பழத்திற்கு உண்டு.
8. தோல் வறட்சி அடையாது பாதுகாக்கும் சத்துப் பொருள் பலாப்பழத்தில் உரிய அளவு இருக்கிறது.
9. பலாப்பழ கீர் இரவில் அருந்தினால் நன்கு தூக்கம் வரும். தூக்கமில்லாமல் அவதிப்படுவோர்க்கு நல்ல எளிய மருந்து.
10. பலாப்பழத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடல் அசதி, களைப்பு நீங்கி, உற்சாகம் ஏற்படும்.
11. பலாப்பழத்துடன் சிறிது கசகசாவை மென்று தின்றால், குடல் அழற்சி நீங்கும்.
12. பலாப்பழத்துடன், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் அத்தனையும் வெளியேறி நலன் பயக்கும்.
பக்க விளைவுகள்:-
1. நீரிழிவு நோய் உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிடக் கூடாது. வெறும் பலாப்பழத்தை அதிகம் தின்றால் செரிமானமின்மை ஏற்படும். ஆஸ்துமா நோயை அதிகரிக்கும்.
Tags:
FRUITS