வைட்டமின்:-
வைட்டமின் - ஏ.
நன்மைகள்:-
1. ஞாபக மறதியை மனிதனை அழிக்கும் கொடிய வியாதிக்கு ஒப்பிடலாம். இவை நீங்கி நினைவாற்றல் அதிகரிக்க பொன்னாங்கண்ணி சூப் சிறந்த மருந்தாகும்.
2. பொன்னாங்கண்ணிக் கீரை ரத்தத்தை சுத்தபடுத்த மிகவும் பயனுள்ளதாக அமைவது.
3. பித்த மாறுபாட்டால் உடலில் பல நோய்கள் தாக்குகின்றன. தலைவலி மஞ்சள் காமாலை, ஈரல் பாதிப்பு, கண் பார்வைக் கோளாறு உருவாகிறது. இதற்கு சிவப்பு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகும் கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்துக் குளித்து வந்தால் நல்லது.
4. பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
5. இதயமும் மூளையும் புத்துணர்வாக்கும்.
6. மேனியை பளபளக்கச் செய்யும்.
7. சொறி சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகிறது.
8. பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்பவர்கள், கண் மருத்துவர்களைத் தேடிப்போக வேண்டிய தேவையே இருக்காது. அந்த அளவுக்கு கண் பார்வையைக் கூர்மையாக்கும் தன்மை உடையது. தொடர்ந்து 48 நாள்களுக்கு (ஒரு மண்டலம்) பொன்னாங்கண்ணிக் கீரையைச் சாப்பிட்டால் பகலில்கூட நட்சத்திரங்களைப் பார்க்கலாம் என்ற சொல்வார்கள். அந்த அளவுக்கு கண்களுக்கு வலிமை சேர்ப்பது இந்தக் கீரை.
Tags:
SPINACH
